K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile
K.SUBBARAYAN, MP

@subbarayank3

Member of Parliament, Communist Party of India.

ID: 1247803744122581003

calendar_today08-04-2020 08:29:43

103 Tweet

525 Followers

79 Following

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்டுகள் தனித் தலைவர்கள் மீது மோகம் கொண்டவர்கள் அல்ல ; தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்! மூட நம்பிக்கைகளின் வழிநடப்பவர்கள் அல்ல; அறிவியல் கண்ணோட்டங் கொண்டவர்கள்! மானுடம் தனைப் பிணைத்துள்ள சகல விலங்குகளையும் தகர்த்து பரிபூரண ஆனந்த உலகைக் கட்டி அமைப்பதே இலக்கு!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

" நான் மனிதப் பிறவி இல்லை பரமாத்மாவால் அனுப்பப்பட்ட வன்!" என்ற மோடியின் கூற்று மோசடியின் முழு மொத்தம்! அறிவியல் உண்மைகளுக்கு அப்பாற்பட்ட ஏமாற்று!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

இராமருக்கு கோவில் கட்டிய மோடியை இராமரும் அயோத்தி மக்களும் கைகழுவி விட்டனர்! மோடி நல்ல பக்தரல்ல கள்ள பக்தர் என்பதைக் கண்டறிந்தே இராமர் கைவிட்டு விட்டார்! தனது மகள்களை மணிப்பூரில் அம்மணப்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிக்காதமோடியை பாரத மாதா தண்டித்து விட்டார்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபாசட்டம் பாய்கிறது! கொடுங்கோலர் ஒரு போதும் செங்கோலராக மாட்டார் என்பதை மோடி நீரூபித்து விட்டார்! வரலாற்றின் தண்டனையில் இருந்து மோடி தப்ப முடியாது! ஜனநாயக உலகம் வீறு கொண்டு போராடும்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சி, ஜனநாய அரசியல் அமைப்பை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்துவிட்டது! இவர்கள் 'அவசர நிலை' குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போலிருக்கிறது! வெட்கங்கெட்டவர்கள்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

பிரதமர்மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதே இல்லை! எதிர்க்கட்சிகளின் வாதங்களைக் கேட்பதே இல்லை! அவற்றிற்கு விளக்கமளிப்பதே இல்லை! பின்னர் எதற்கு பிரதமர் பொறுப்பு? நாடாளுமன்றப் படிக்கட்டை அல்ல, ஜனநாயக மரபை மதிக்க வேண்டும் ; அதன் முன் மண்டியிட வேண்டும்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

பாஜக தனது இயல்பான அரசியல்புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை! இது அனுபவம் காட்டும் பாடமாகும்! ஜார்கன்ட் மாநிலத்தில் முக்கி மோர்ச்சாவில் இருந்துஆள்பிடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது! சேற்றில் குதிப்பதில் பாஜகவிற்கு அலாதிப் பிரியம்! இத்தகைய பாதை தரங்கெட்டது; பண்புக் குறைவானது !

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

இலஞ்ச ஊழலும், முறைகேடுகளும் தனி உடைமை சமூக அமைப்பு பெற்றெடுத்த தீங்குகள்! தனி உடைமை சமூக அமைப்பு நீடிக்கிற வரை இந்தத் தீங்குகளும் நீடிக்கும்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

பள்ளிகளுக்குள்ளும் 'இந்துத்துவா' என்ற இந்தியப் பண் பாட்டிற்கு எதிரான தீய கருத்துகள் மிக எளிதாக ஊடுறுவி வருகின்றன! பிஞ்சுக் குழந்தை முதல் இளைய தலைமுறையினருக்கு அறிவியல் பார்வையை, பகுத்தறியும் விழிப்பை, மூடக்கருத்துகளை சுட்டெரிக்கும் கனலை மூட்ட வேண்டும் என்பதே!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

Budget ஒதுக்கீடுகள் வாய்க்கால்கள் குடிக்க விடாமல், சிந்தாமல், சிதறாமல் மக்களை வந்தடைய வைக்கும் முறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும் அரசே மக்கள் நல அரசு என்பதன் சொல்லுக்குப்பொருத்தமான அரசாகும் !

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

விஜயின் வி.சாலை மாநாடு வெற்று வேட்டு மாநாடு தான்! கும்பல் இருந்தது, கொள்கைக் கூர்மை இல்லை! அரசியல், பொருளாதார, சமூகப்பிரச்சினை களின் பால் அவரது கொள்கை என்ன? ஒன்றுமில்லை! பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிளவு படுத்தும் உள்நோக்கம் கொண்ட அரசியலாகக் கருத இடமளிக்கிறது!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

வகுப்பறைகளில் தொங்கவிடப் பட்டுள்ள வரைபடங்களல்ல இந்தியா! இந்தியாவில் வாழ்கிற 142 கோடி மக்களே இந்தியா! இவர்களை சாதி, மத, இன, நிற , மொழி என வெறுப்பை வளர்ப்பது தேசவிரோதம்! வேற்றுமைக்குள் ஒற்றுமையை கட்டுவதே தேசப் பணி!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

ஆதவ் அர்ஜுன் யாருடைய ஆயுதம்? அவர் தமிழ்நாட்டில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற விரும்புகிறார்? பாஜக பற்றி வாயே திறக்கவில்லையே ஏன்? இவர், திமுக அணியின் ஆதரவுத்தளத்தைத் தகர்க்க பாஜகவால் ஏவிவிடப்பட்ட அரசியல் ஆயுதம்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

மாநிலங்களவையில், அவைத் தலைவர் தன்கர், "நான் சார்ந்த சமூகமும் குறிவைக்கப்படுகிறது" என்று சாதிவெறியைத்தூண்டிவிடுகிற இந்த அற்பமானுடர் துணைக் குடியரசுத் தலைவராக நீடிக்கலாமா? அவைத் தலைவராக நீடிக்கலாமா?

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி ஆர் எஸ் எஸ் காரர்! அவரை ஆட்டுவித்து தமிழ்நாட்டில்அரசியல் சதுராட்டம் நடத்துவது யூனியன் பாஜக அரசு! அவரது அத்துமீறல் ஜனநாயக, அரசியல் சட்ட எல்லைகளைத் தாண்டிய பயங்கரவாதம்! கிராமம் வரை ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு மக்கள் இயக்கத்தை திமுக அணி தொடங்க வேண்டும்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

கம்யூனிச சமுதாயத்தை நோக்கியே மனிதகுலத்தை வரலாறு அழைத்துச் செல்கிறது! இது சமூகவிஞ்ஞானம் ஆய்ந்து கண்டறிந்த வரலாற்று உண்மையாகும்! எளிய பொதுவுடைமை வாழ்க்கை முறையில் தொடங்கிய மனிதகுலம், விஞ்ஞானக் கம்யூனிசத்தை நோக்கியே வளரும்! இதுவரலாற்று விதி! இதை எந்த சக்தியாலும் தடுத்திட முடியாது!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

அஇஅதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டது, அதன் அழிவை அறிவித்துக் கொண்டதாகும்! பாஜக ஒரு மரணக்குழி! ஒரு கட்சியை அழிக்க முடிவெடுத்து விட்டால் அந்தக் கட்சியோடு பாஜக கூட்டணி அமைக்கும்! வலையில் சிக்கிவிட்டது அஇஅதிமுக! இனி அது பிழைக்காது! 2026-ல் பாஜக அதை தின்று ஜீரணித்து விடும்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிசாமி , 'கம்யூனிஸ்டுகளுக்கு முகவரி இல்லை!' என்று உளறிக் கொட்டியுள்ளார்! அவரது உளறலை தமிழ்நாடு நன்கறியும்! உலகின் தூக்கத்தைக் கெடுக்கிறடிரம்பின் தூக்கத்தை சிதைக்கிற ஒரே பெயர் 'கம்யூனிஸ்ட்'! கம்யூனிஸ்ட்டின் முகவரியை உலகறியும்! உதவாக்கரைகளுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்!

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

ஜனநாயக எல்லை தாண்டிய 'பயங்கரவாதம்' மண்டிக் கிடப்பது பாஜகவிடம் தான்! ஜனநாயகத்தை வெறுத்துப் பகைக்கிற கட்சி அது! SIR என்ற பெயரில், ஆதார், ரேசன் , ஓட்டர் ID அடையாள அட்டைகளெல்லாம் செல்லாது என்று அறிவிக்க வைத்த சூத்திரவாதிகள் யார்? அரசின் அட்டைகள் வெற்றுக் காகிதங்களா?

K.SUBBARAYAN, MP (@subbarayank3) 's Twitter Profile Photo

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் தேவைகளையும், அவ்வக்காலங்களில் தங்குதடை ஏதுமின்றி பெருகிற, வாழ்க்கை முறையேவிஞ்ஞான சோசலிசம்! அது முற்றிப் பழுத்த நிலையே கம்யூனிசம்! இந்த முறையிலான சமுதாயத்தைக் கட்டி அமைக்க வழிகாட்டுவதே மார்க்சிசம் ! அதற்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள்!