ARUNACHALAM (@arnchlam) 's Twitter Profile
ARUNACHALAM

@arnchlam

ID: 1341387516

calendar_today10-04-2013 08:55:29

146 Tweet

35 Followers

30 Following

Direction Department (@directiondpt) 's Twitter Profile Photo

Thank you for making us who we are today! Thank you for all you have taught me! Thanks for being a true mentor in our hearts. Happy Teacher’s Day!

Thank you for making us who we are today! Thank you for all you have taught me! Thanks for being a true mentor in our hearts. Happy Teacher’s Day!
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.(1/2)

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் #iWillCHANGE_iWillVOTE #என்ஓட்டு_என்பெருமை

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்?! (1/2)

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் நினைவு நாள் இன்று. 70 பேருந்துகளில் சென்ற 2,500 ரிசர்வ் படையினர், வெடிப் பொருட்கள் நிரம்பிய வாகனத்தால் தாக்கப்பட்டதில் 40க்கும் அதிகமானோர் உயிரைப் பறிகொடுத்தார்கள். அவர்களின் உயிர் ஈகையை நினைவுகொள்வோம்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

“சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்.”

“சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.
தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்.”
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது.

Congratulations to Wrestler Ravikumar Dahia for his Silver medal win at the #Tokyo2020 . He has uplifted not just his village, but the entire nation.

அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் Rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அதிகாரபூர்வ அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களே குடிமக்களின் தனித்துவத்தைக் கேலிசெய்யும் விதமாகப் பேசிப் பார்க்கும் கொடுங்காலம் இது. நம் தனித்துவம் நம் மொழி. அதன் அடையாளமாக தமிழ்ப் புத்தாண்டை மேலதிக உற்சாகத்தோடு கொண்டாடுவோம்.